வெஞ்சிறை ஏகிய வீரர்கள்

   
   ஜாக்டோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இயக்கங்களின் பேரமைப்புடன் இணைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம், போனஸ், மருத்துவப்படி உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி 22.06.1988 முதல் 22.07.1988 வரை 31 நாட்கள் நடைபெற்ற வீரஞ்சொறிந்த போராட்டங்கள், இந்த போராட்டத்தில் 21 நாட்கள் சிறை சென்ற அரசு ஊழியர்கள் 134 அரசு ஊழியர், ஆசிரியர்களில் வருவாய்த்துறை சிறை சென்ற நெஞ்சுரம் மிக்க தோழர்கள்.

வ.எண். பெயர்
சிறை சென்ற நாட்கள்
1. R.K.பாலகிருஷ்ணன்
30 நாட்கள்
2. P.N.பிரபாகரன்
3. R.ரவிச்சந்திரன்
20 நாட்கள்
4. P.காங்கமுத்து
5. S.முகம்மது மொய்தீன்
6. T.இளங்கோ
7. T.A.தங்கவேல்

2003 எஸ்மா டெஸ்மா

   அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் நோக்கில் தமிழக அரசு 2003-ம் ஆண்டு ஒரு அடக்குமுறையைநம்மீது ஏவியது மேற்ப்படி உரிமைகளை மீட்டெடுக்கும் நேர்வில் அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும்ஒருங்கிணைந்து ஜாக்டோ ஜியோ எனும் அமைப்பினை ஏற்ப்படுத்தி தமிழக அரசுக்கு எதிராக போராட முடிவெடுத்தது அதன் அடிப்படையில் 02.07.2003 முதல் ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது . இந்த போராட்டத்தினைஇரும்புக்கரம் கொண்டு அடக்கும் நோக்கில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது 02.07.2003 தொடங்க இருந்த மேற்ப்படி போராட்டத்தினை முன்னெடுத்து வழிநடத்திய அனைத்து சங்கங்களின் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகளைகாவல்துறையைக் கொண்டு 30.06.2003 முதல் காவல்துறையினை ஏவி கைது நடவடிக்கையை மேற்கொண்டது. முக்கிய தலைவர்கள் தலைமறைவாக இருந்துகொண்டு திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தினை 02.07.2003 தொடங்கினர். தமிழக அரசு இந்த போரட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் 1,76,000 பேரைஎஸ்மாடெஸ்மா என்ற சட்டத்தினை இயற்றி ஒரே அரசாணையில் அனைவரையும் பணிநீக்கம் செய்தது. இந்த அடக்குமுறையும் கைது நடவைக்கையும் ஒருபுறம் நடந்து கொண்டு இன்ருந்தாலும் போராட்ட வேகம் குறையவில்லை நாளுக்கு நாள் போராட்டத்தின் வியூகங்கள் வகுக்கப்பட்டு அரசுக்கு எதிரான நெருக்கடியை அதிகப்படுத்திக்கொண்டிருந்தது. இந்த அடக்கு முறைக்கு அடிபணியாதஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தம் 02.07.2003 முதல் 30.03.2003 வரை 28 நாட்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் உரிமைகளை மீட்க சிறை சென்ற வீரர்களைத்தவிர மற்ற ஊழியர்களை உச்சநீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் பணிக்கு திரும்ப அழைத்துக்கொண்டது கைதாகி சிறைசென்ற அனைவரையும் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து நிரந்தர பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் சார்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பானது சென்னை உயர்நீதி மன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து ஒரு உத்தரவினைப்பெற்றது. அந்த உத்தரவின்படி சிறை சென்று நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட ஊளியர்கழி விசாரணை செய்து மீண்டும் பணியினை வழங்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்தது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் விசாரணை முடிந்து 6 மாதங்களுக்கு பிறகு 02.01.2004 அன்று மீண்டும் அனைவரையும் பணிக்கு திரும்ப அழைத்துக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது.

இப்போராட்டத்தில் சேலம் மாவட்டத்தில் கைதாகி சிறை சென்றவர்கள் மற்றும் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் விவரம்.

வ.எண். பெயர்
சிறை சென்ற நாட்கள்
1. V.அர்த்தனாரி
15 நாட்கள்
2. P.சந்துரு
3. S.P.அபுபக்கர்
4. A.ஜீவகாருண்யம்
13 நாட்கள்
5. N.சக்திவேல்
6. A.V.செல்வராஜ்
7. V.பூபதிராஜா
8. சுப்ரமணி
9. செல்வம்
10. மதுரபிள்ளை
11. A.S.அன்வர் ஷெரீப்
12. A.தேசிகன்
13. R.பெரியசாமி
14. குப்புசாமி
15. கிருஷ்ணன்
16. S.மகேஷ்வரன்
17. அல்டாப் முகமது

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் தொடர் முயற்சியால் கைது செய்யப்பட நாட்களும் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்ட நாட்களும் பணி நாட்களாக பாவித்து தமிழக அரசிடமிருந்து முறையாக அரசானை பெறப்பட்டது.

 

ஜீவா ஒரு சகாப்தம்
ஜீவா ஒரு சகாப்தம்
சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்