தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
சேலம் மாவட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் எந்த நோக்கத்திற்காக தோற்றி வைக்கப்பட்டதோ அதன் வடிவம் சிறிதும் குறையாமல் சேலம் மாவட்டம் வீரம் செறிந்த போராட்டங்களையும், உயிர் தியாகங்களை செய்தும், வெஞ்சிறை பல கண்டு போராடி ஊழியர்களின் பாதுகாப்பு அரணாகவும், உரிமைகளை மீட்டெடுக்கும் இனத்தோன்றல்களாலும் இன்று வரை ஊழியர்களின் மகத்தான ஒற்றுமையுடன் செயலாற்றி வருகின்றது.

   சாதி, இனம், மொழி, மாதம் என்ற வேறுபாடுகளை எல்லாம் கடந்து வருவாய்த்துறை எனும் குடும்பத்தில் வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்தாலும் ஒரு தாய் மக்களாக இணைந்த நாம் அனைவரும் ஊழியர் நலனிற்காகவும், பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெடுக்கும் போராளிகளாகவும் சீரிய செயல்பாட்டினால் சேலம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் திகழ்ந்து வருகின்றது.

   சேலம் மாவட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் இன்று வரையில் எழுச்சியுடன் திறம்பட செயல்பட ஊழியர்கள் நலன் காக்க போர்குணத்துடன் போராட, உரிமைகளை வெல்ல போராட்ட களம் காண தன்னலமில்லாமல் உழைத்து, தன்னுயிர் நீத்து, சிறைகள் பல கண்டு ரத்தம் சிந்தி இயக்கம் கண்ட நமது வருவாய்த்துறையின் முன்னணி தோழர்கள் ஏராளம், அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல், அதிகார வர்க்கத்திற்கு துணை போகாமல், ஊழியர் நலனே முக்கியமென முழக்கமிட்டு சங்கம் வளர்த்த சேலம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறையின் தன்னிலமில்லாத மாவட்ட தலைவர்கள்.

    1970-ம் ஆண்டில் மாவட்ட தலைவராக வருவாய்த்துறை ஊழியர்களின் பாதுகாவலனாக திகழ்ந்தவர் தோழர் திரு.V.சுகவனம், அவர்கள் இவர் 1970 முதல் 1978 வரை சுமார் எட்டாண்டுகள் மாவட்ட தலைவராக ஊழியர்களின் அடக்குமுறைக்கு எதிராக பல போராட்டங்களைக் கண்டு வெற்றிப்பெற்ற நேர்மைமிக்க இயக்க போராளி நாம் இன்று அனுபவித்து வரும் பல்வேறு சலுகைகளை வென்றிட திறம்பட செயலாற்றிய மிகசிறந்த சங்கவாதி என்றால் மிகையாகாது. இவரை தொடர்ந்து தோழர் திரு.காசிவிஸ்வநாதன் 1978 முதல் 1980 வரையிலும், தோழர் திரு.தனசேகரன் 1980 முதல் 1987 வரையிலும் மாவட்ட தலைவர்களாக திறம்பட செயலாற்றி சங்கத்தின் வளர்ச்சிக்காக பெரும்பங்காற்றியுள்ளனர்.

   வெகு சிறப்பாக செயல்பட்டு வந்த சேலம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மேலும் பலத்துடன், மிகுந்த வேகத்துடனும் செயல்பட ஆரம்பித்த காலகட்டம் எதுவென்று சொன்னால் 1988 முதல் 1989 வரை இந்த காலகட்டத்தில்தான் தோழர் திரு.V.பொன்னுசாமி அவர்கள் மாவட்ட தலைவராக இருந்து இந்த சங்கத்தினை வலிமையாக்கி, தொடர்ந்து மேலும் சங்கம் சிறப்புற செயல்பட காரணமாக இருந்த பெருந்தகையாவர். இவருக்கு பின்பாக தோழர் திரு.S.ராஜமாணிக்கம் அவர்கள் 1990 முதல் 1994 வரை மாவட்ட தலைவராகவும், மீண்டும் 1994 முதல் 1998 வரை தோழர்.V.பொன்னுசாமி அவர்களும் மாவட்ட தலைவராக பொறுப்பேற்று ஊழியர் நலனிற்காகவும், சங்கத்தின் வளர்சிக்காகவும் உணர்வுடன் பாடுபட்டார்.

   அடுத்தபடியாக 1999 முதல் 2001 வரை திரு.M.சந்திரசேகரன் அவர்களும் 2001 முதல் 2009 வரை 8 ஆண்டுகள் மாவட்ட தலைவராக வெகு சிறப்பாக திரு.N.சக்திவேல் அவர்களும் அடுத்த கட்டமாக 2009 முதல் 2011 வரை திரு.M.அழகிரிசாமி அவர்களும் மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்று திறம்பட சங்கத்தினை வளர்க்க பாடுபட்டவர்களாவர்கள். 2012 முதல் 2017 வரை ஐந்து ஆண்டுகள் A.ஜீவகருண்யம் அவர்கள் சங்கத்தின் தலைவராக திறன்படசெயலாற்றி சங்க வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார்.

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்