அடைந்த சாதனைகள் போதுமா? இனி குறைகளே இல்லையா? உண்டு இன்னுமும் நம் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேலைப்பளுக் கொடுமைகளிலிருந்து விடுபட; அவ்வப்போது நம்மைத் தாக்கும் அடிமைச் சட்டங்களின் பாதிப்பிலிருந்தும் நமது எதிர்காலத்தினை கேள்விக் குறியாகமாற்றி அவ்வப்போது பிறக்கும் கறுப்புஸ் சட்டங்களின் கோரப்பிடியிலிந்து விடுபட சங்க நடவடிக்கை என்பது என்றுமே ஓர் தொடர்கதை தான்
உரிமைகள் மறுக்கப்படும் போதும் நியாயங்கள் அழிக்கப்படுகின்ற போதும், கடந்த காலங்களைப் போலவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் -போனாலும் எங்கள் நிலை உறுதியானது, கட்டுக் கோப்பானது எனச்சொல்லி கடுமையான ஒருங்கினைந்த சங்க நடவடிக்கைகள் மூலம் மட்டுமே உரிமைகளை நியாயங்களை நிலை நிறுத்த முடியும் என்ற சமூக விஞ்ஞானத்தின் சட்டத்தினை உணர்ந்திடுவோம். இதில் யாரும் எதுவும் எந்த நிலைகளிலும் வேறுபடமுடியாது.
இந்த கோட்பாடுகளின் - கொள்கைகளின் வழியில் சாதி, மத, இன, கட்சி, அரசியல் வேறுபாடுகளை தவிடு பொடியாக்கி நமது பேரியக்கம் தொடர்ந்து போடும் வீரு நடையில் தங்கள் பங்கு என்ன? இந்த கட்டாய கடமையில் தங்கள் சிந்தனை எழுச்சி சீரிய பங்கு எதுவாக இருக்க வேண்டுமென முடிவெடுப்போம் செயலாற்றுவோம்.
வருவாய்த்துறையில் பணியாற்றுபவர்கள் வேறு எந்த துறைகளிலும் இல்லாதவாறு வட்டாட்சியர் 56 வகையான பணிகள், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் 17 வகையான பணிகள், மண்டல துணை வட்டாட்சியர்கள் 56 வகையான பணிகள் சரக வருவாய் ஆய்வர்கள் 27 வகையான பணிகள் பார்த்து வருவதுடன் நில அளவை பயிற்சி காவல் துறை பயிற்சி மற்றும் நீதித்துறை பயிற்சி பெற்று மற்ற துறைகளிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட நிலையில் பணியாற்றி வருகின்றோம்.
சங்கத்தை உடைப்பது உள்ளிட்ட அரசின் சதி திட்டங்களை முறியடித்து ஜாதி மதங்களை பாரோம் குலத்தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம் என்ற அடிப்படையிலும் அனைத்து நிலை ஊழியர்களையும் மதித்து ஒருங்கிணைந்து நாம் பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் நடத்தி உயிரிழந்து பெற்ற உரிமைகளாகும்.
நாம் பெற்ற வெற்றிகள் ஏதோ ஒரு தனி மனிதனால் சாதிக்கப் பட்டவைகள் அல்ல சங்கம் என்ற ஒற்றுமை பதாகையை உயர்த்திப் பிடித்து ஒவ்வொரு முடிவுகளையும் மாநில நிர்வாகிகள் கூடிப்பேசி விவாதித்து இறுதிப்படுத்தி நமது சங்கத்தின் உயர்ந்தபட்ச அமைப்பான மத்திய செயற்குழுவில் உரிய காலத்தில் கூடி விவாதித்து முடிவெடுத்து முழுவதுமாக அமுல்படுத்தியன் விளைவாக சங்கத்தின் வலிமையை ஆட்சியாளர்கள் பலமுறை உணர்ந்ததன் விளையும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் வைத்து அரசின் திட்டங்கள் செம்மையாக மக்களுக்கு சென்றடைய கால நேரமின்றி செயல்படுத்தியதின் விளைவே ஆகும்.