வட்டக்கிளையின் செயல்பாடுகள்

சேலம் மாவட்டம் 13 வட்டங்களை கொண்டதாக இருந்தாலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வட்டக்கிளையானது 10 வட்டங்களில் திறம்பட செயலாற்றி வருகிறது.

மாநில மையமும், மாவட்ட மையமும் ஊழியர் நலம் சார்ந்த அனைத்து போராட்டங்களையும் ஆர்பட்டங்களையும் உணர்வுகளுடன் கடைகோடி உறுப்பினர்களுக்கு எடுத்துச்சென்று போராட்ட தேவைகளை எடுத்துக்கூறி அனைத்து உறுப்பினர்களுக்கும் எடுத்துக் கூறி அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து போராட்ட, ஆர்ப்பாட்ட களம் காண செய்வதில் தலைசிறந்து விளங்குகின்றன. வட்டக்கிளைகளில் திறம்பட செயலாற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் வட்டக்கிளைகளில் இருக்கும் ஊழியர் நலன் சார்ந்த பிரச்சனைகளை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை செய்து ஊழியர்களின் பாதுகாப்பு அரணாக வட்டக்கிளை சங்கம் விளங்கி வருகின்றது. மேலும் ஆண்டு தோறும் உறுப்பினர் சந்தா, சங்கக்குரல் சந்தா வசூல் வநிகளை அனைத்து வட்டக்கிளை நிர்வாகிகளும் சிறந்த முறையில் வசூல் செய்து வழங்கி வருகின்றது.

தமிழ் நாட்டில் இருக்கின்ற 32 மாவட்டங்களில் சங்க செயல்பாடு என்பது சேலம் மாவட்டத்தின் சங்க செயல்பாடு என்பது சேலம் மாவட்டத்தில் சிறந்து விளங்க காரணம் வட்டக்கிளைகளின் மிகச்சிறந்த கட்டமைப்பு என்று சொன்னால் மிகையாகது. மாநில மற்றும் மாவட்ட மையம் எடுக்கும் எந்த ஊழியர் நலம் சார்ந்த முடிவாக இருந்தாலும் அதனை வட்டக்கிளை தோறும் கறாராக அமுல் படுத்தும் திட்டமிட்ட தேர்வின் வெளிப்பாடே போராட்ட வெற்றியாகும். நாம் கடந்து போக வேண்டிய பாதை என்பது புல்தரையல்ல...? கரடு முரடான கற்கள் நிறைந்த காட்டுப்பாதை என்பதை நீங்கள் உணர வேண்டும். அதனை நாம் கடக்க போராட்டம் எனும் ஆயுதத்தினை ஏந்தி பிடிக்க வேண்டிய கட்டாயம் எதிகாலத்தில் காத்து இருக்கின்றது. என்பதனை உணரும் தருணத்தில் வட்டக்கிளை செயல்பாடு என்பது மிக முக்கியமான ஒன்றான ஊழியர்களின் இணைப்பு பாலமாகும்.

இன்றைய நாளில் மாநில நிர்வாகிகளாக, மாவட்ட நிர்வாகிகளாக தலைசிறந்து விளங்கும் அனைவருமே.....! வட்டக்கிளை நிர்வாகிகளாக தமது சங்க பணியினை அடிமட்டத்தில் இருந்து துவங்கியவர்கலாக மட்டுமே இருக்க முடியும் என்பதனை நாம் உணர்வது அவசியம் தோழர்களே....!

வருவாய்த்துறை ஊளியர்களாய்
இரவு, பகல் பாராது நித்தம்
உழைக்கும் ஏழை வர்க்கம் நாம்
எல்லாம்......!
அதிகாரத்திற்கு அடிபணியோம்.....!
அடிமைத்தனத்தினை உடைத்தெறிவோம்....!
ஊரிமைகளை மீட்க போராட்ட களம்
காண்போம்....!
ஓரணியாய் சேர்ந்திடுவோம்...!
கோரிக்கைகளை வென்றிடுவோம்...!
- சேலம் மாவட்ட
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம்.

 

 
சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்