லெனின் எனும் புரட்சியாளன்

    சேலம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் திரு.பெ.ச.லெனின், வட்டாட்சியர் அவர்கள் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து சங்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட தோழராவார் ! சங்கத்தின் அனைத்து போராட்ட நிகழ்வுகளிலும் தன்னை அர்ப்பணித்து கொள்ளும் தன்னிலமில்லா சங்கத்தின் செயல்மறவர், சங்க செயல்பாடுகள் குறித்து மாவட்ட மையத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி ஊழியர் நலன் சார்ந்த போரட்டங்ககளும், ஆர்ப்பாட்டங்களும் வெற்றிபெற உழைத்திட்ட தோழன்.....!
    தமிழகம் முழுவதும் பரவி கிடக்கும் அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் நியாயமான வாழ்வாதார கோரிக்கைகளை வெல்ல உருவாக்கப்பட்ட கூட்டமைப்புதான் ஜாக்டோ ஜியோ.
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய தமிழக அரசின் நடவடிக்கையினை கண்டித்து ஜனவரி-22 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததின் பேரிலும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையம் இப்போராட்டத்தில் பங்கேற்பது என்ற நிலைபாட்டினை எடுத்த நிலையிலும் சேலம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வழக்கம் போல் போராட்ட களத்திற்கு தன்னை முழுமையாக தயார் படுத்தி கொண்டு ஊழியர்களையும் போராட்ட களத்திற்கு அழைத்து வர தயாரானது 22-01-2019 முதல் தொடங்கிய போராட்டம் வெகு எழுச்சியாக நடைபெற்ற நிலையில் 25-01-2019 மறியலில் எங்களுடன் பங்கேற்று கைதாகி சிறைக்கு வந்த தோழர் திரு.பெ.ச.லெனின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் தப்பித்துசெல்ல பல வழிகள் இருந்தும் புறமுதுகிடாது தைரியமாக கைதாகி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் வென்றிட வேண்டும் என்ற வேட்கையுடன் கைதாகி 26-01-2019 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
    அருமை தோழர்! சிறையில் அடைப்பதற்கு முன்பாக காவல்நிலையத்தில் இருந்தபோது ஒரு ஆடியோ பதிவில் போராட்டத்தின் நன்மையினையும், அனைவரும் போராட்டத்தில் பங்கேற்பதின் நோக்கத்தினையும் தெளிவாக பதிவிட்டு போராட்டத்திற்கு வலுசேர்த்த மாவீரன் தோழர் திரு.பெ.ச.லெனின் அவர்கள் என்றால் மிகையாகாது. 26-01-2019 அன்று சிறையில் அடைக்கப்பட்ட தோழர் திரு.பெ.ச.லெனின் அவர்கள் நான்கு நாட்களுக்கு பின்னர் 30-01-2019 ஆம் தேதி காலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அருமை தோழர் திரு.பெ.ச.லெனின் அவர்களின் போராட்ட பங்கேற்பும், சிறைவாசமும் போற்ற தக்க வரலாற்று சிறப்பு மிக்க பதிவாக கருதவேண்டும். தோழர் திரு.பெ.ச.லெனின் அவர்களின் சிறைவாச தியாகம் வருவாய்துறை என்று ஒன்று இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
போராட்டங்கள் ஓய்வதில்லை......!!!!
தியாகங்கள் என்றும் வரலாற்றில் மறைவதில்லை....!!!!

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்