மாநில மையத்திற்கான நிதி

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட மையம் மாநில மையத்தின் அனைத்து போராட்ட முடிவுகளுக்கும் முழுமையாக தனது பங்களிப்பினை அளித்து முன்னோடி மாவட்டமாக உறுப்பினர்களின் ஒற்றுமையினால் திகழ்ந்து வருகிறது. மாநில மையத்தின் தலைமை அலுவலக கட்டிடம் சென்னை சேப்பாக்கத்தில்பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவது என முடிவெடுத்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் பங்களிப்புகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது அதன்படி சேலம் மாவட்டத்திற்கு ரூ.10,00,000/- வழங்க கோரப்பட்டது. அதன் அடிப்படையில் மாநில மையம் அறிவித்த 10 தினங்களுக்குள் சேலம் மாவட்ட மையத்தின் வேண்டுகோளை ஏற்று வருவாய்த்துறை சகோதர சகோதரிகள் சங்க உணர்வுடன் தங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்த போதிலும்தங்களால் இயன்றதை வழங்கி ரூ.10,00,000/--தை நிறைவுசெய்தார்கள். அந்த கட்டிட நிதியினை தமிழகத்தின் முதல் மாவட்டமாக 09.07.2018 அன்று மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்ற மாநில மைய நிதியளிப்பு விழாவில் உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

- மாவட்ட செயலாளர்
TNROA, Salem

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்