சங்கத்தின் அமைப்பு ரீதியான நிகழ்வுகள்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள், சங்க அமைப்பு விதிகளின் படி சுழற்சி முறையில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இம்மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு தற்போதுள்ள மாவட்ட நிர்வாகிகள் 18-12-2017 ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டோம்.

பொறுப்பேற்ற தினத்திலிருந்து இன்று வரை (31-12-2018) தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பில் பல்வேறு இயக்கங்களை நடத்தியிருக்கிறோம். வீரம் செறிந்த பொது வேலை நிறுத்தத்தில் 100% முழுமையாக பங்கேற்று முன்னனி பாத்திரமாக விளக்கியிருக்கிறோம். நிகழ்வுகள் முக்கியத்துவத்தை அறிந்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட செயற்குழு கூட்டம், பொதுக்குழுகூட்டம் நடத்தி பிரச்சனைகளை தீர்பதற்காக எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் செய்த வேலைகளையும் எதிர்கால கடமைகளையும் சுருக்கமாக கீழ்க்காணும் தலைப்புகளில் தொகுத்து உங்கள் முன் வைக்கிறோம். அறிக்கையில் விடுபட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இவ்வறிக்கையை செழுமைபடுத்த உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறோம்.

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்