பொன்விழா ஆண்டு
  • சமுக நல தனி வட்டாச்சியர் சம்பளப் பட்டி, பணமாக்கும் அதிகாரம் (Pay of Drawing Power) பெற்றோம்.
  • வட்டாட்சியர்கள் / வருவாய் கோட்டாட்சியர்கள் ஈர்ப்புக்கு கூடுதல் டீசல் ஒதுக்கீடு பெற்றோம்.
  • அரசன் கொள்கை நமாற்றத்தினால் பணியிடங்கள் கலைக்கப்பட்ட போது மிகைப்பணியிடங்களை பெற்று ஊழியர்கள் பணி நீக்கத்திலிருந்து பாதுகாத்துள்ளோம்.
  • அலுவலக உதவியாளர் ஆட்குறைப்பு அரசாணைக்கு விதிவிலக்கு பெற்று 1127 வருவாய் ஆய்வாளர்களுக்கு 1127 அலுவலக உதவியாளர் பணியிடம் பெற்றுள்ளோம்.
  • பதிவுரு எழுத்தர்கள் பதிவுரு உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளோம்.
  • தட்டச்சர்கள் நேரடி உதவியாளராக ஆவதற்கு தடையாக இருந்த 36கே விதி தளர்வு பெற்று பதவி உயர்வு பெறுவதற்கு வழிவகை செய்தோம்.
  • இளநிலை வருவாய் உதவியாளர்கள்/ வருவாய் உதவியாளர்கள் பவானிசாகர் பயிற்சி பெறுவதில் உள்ள சிரமத்தை களைய மாவட்ட அளவில் பயிற்சி மையங்களை ஏற்படுத்தினோம்.
  • காலியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தட்டச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு சிறப்பு தேர்வு மூலம் நிரந்தரப்படுத்த வழி வகை செய்தோம்.
  • அரசின் கொள்ளை முடிவின் காரணமாக காலியிடங்கள் அதிகளவில் இருந்ததை களைய அனைத்து வருவாய் உதவியாளர் காலி இடங்களையும், நேரடி நியமன வருவாய் உதவியாளர்கள் மூலம் நியமனம் செய்ய வலியுறுத்தி காலியிடங்களை பூர்த்தி செய்தோம்.
  • கருணை அடிப்படை நியமனத்தில் வருவாய் துறையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடங்களில் 25% நிரப்பிட ஆணை பெற்றோம். 23-02-1992 முதன் முதலில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றி 2011 -இல் வருவாய் இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர் என பெயர் மாற்றம் பெற்றோம்
  • 2011 ல் அரசுடன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சட்டச்சர்களுக்கு ரூ.400/- வருவாய் இளைநிலை வருவாய் உதவியர்களுக்கு ரூ.400/- வருவாய் உதவியாளர்களுக்கு ரூ.400/- ஊதிய உயர்வு பெற்று அது அனைத்து பகுதி தட்டச்சர் இளைநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கிடைக்க காரணமாக இருந்தோம்.
  • 2011ல் வட்டாச்சியர்களுக்கு ரூ.1000/- துணை வட்டாச்சியர்களுக்கு ரூ.500/- தனி ஊதியம் கிடைக்க காரணமாக இருந்தோம்.
  • சங்கத்தின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டங்கள், இதர வேலை நிறுத்தங்கள் மற்றும் அகில இந்திய அளவில் நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றிற்கான காலத்தை பணிகாலமாக முறைப்படுத்தி ஆணைகள் பெற்றோம்.
  • பிர்க்கா வருவாய் ஆய்வாளர்கள் பணியிடம் இளநிலை உதவியாளர் நிலையிலிருந்து உதவியாளர் நிலைக்கு உயர்த்த பெற்றோம் (1972-ல்)
  • துணை வட்டாட்சியர்கள் நீதிபரிபாலன பயிற்சி நீதி மன்றங்களிலேயே 6 மாத காலம் பெற வேண்டும் என்ற ஆணையைப் பெற்றோம். (1972-ல்) தற்போது இப்பயிற்சி 4 மாதகாலம் அளிக்கப்படுகிறது
  • 21 துணை வட்டங்களை முழு வட்டங்களாக உயர்த்தப் பெற்றோம்.(தற்போது மாநிலத்தில் துணை வட்டங்களே இல்லை)
  • துணை கலெக்டர் நேரடி நியமன விகிதாசாரம் மீறப்பட்டிருந்த நிலையில் மேற்கொண்டு நியமனங்களை குறிப்பிட்ட வரையறைக்குள் கொண்டு வந்தோம்.
  • 1975 ஆம் ஆண்டில் பஞ்சப்படிக்காக உண்ணாவிரதம் இருந்தால் 29 முன்னணி ஊழியர்கள் பெற்ற தண்டனையை (வேலுர் மாவட்டத்தில் இரண்டு) ரத்து செய்யப்பெற்றொம்.
  • வருவாய் ஆய்வர்களின் தலைமையிடங்களில் சகல வசதிகளுடன் கூடிய குடியிருப்பு இல்லங்கள் கட்டப்பெற்றொம்.
  • தேர்வானைக்குழு மூலம் பணிநியமனம் பெற்றவர்கள் வேலை நீக்கம் பெரும் அபாயத்தை தடுக்க உபரி பணியிடங்களை பெற்றோம். இன்னும்........

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முந்தோன்றிய மூத்தக்ககுடி தமிழ்க்குடி-என்பர்
அதேபோன்று துறைகளில் தாய்துறை,
மூத்ததுறை வருவாய்துறை

  வருவாய்த்துறையில் மூத்ததும், நிலைத்து நிற்பதும், நேர்மையாக, தூய்மையாக பொன்விழா ஆண்டினை கடந்த சங்கம் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் என்றால் அது மிகையாகாது.

    வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் பொது சங்ககளுக்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும், போராட்டங்களில் முன்னிலையில் இருந்தும் துறைக் கோரிக்கைகளுக்கான போராட்டமாக இருந்தாலும், பொதுக் கோரிக்கைகளுக்கான போராட்டமாக இருந்தாலும் தலைமையேற்று வெற்றிகளை பெற்று தந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள்.

அருமையான அங்கத்தினர்களே!

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்