தடையாணை புத்தகம்

   மாவட்ட அலுவலக நடைமுறை நூல் பத்தி 161-ல் தடையாணைப் புத்தகத்தின் பதிவு செய்ய வேண்டிய நிலங்கள் மற்றும் முறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்தவிதமான நிலங்களை ஒப்படை, நிலமாற்ற உரிமை மாற்றம் குத்தகை போன்றவைக்கு கொடுக்கக் கூடாது என உறுதி செய்து தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

1. கிராமத்தில் உள்ள நீர் நிலைப் புறம்போக்குகள் , மயானம், மந்தைவெளி புறம்போக்குகள் அவற்றின் பொது நன்மை கருதியும், பிற்கால தேவை கருதியும் தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

2. குறிப்பிட்ட புறம்போக்கில் ஒரு வகுப்பினர் ஆக்ரமணம் செய்ய எத்தனித்திருக்கும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதினால் அந்நிலத்தை தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்திடல் வேண்டும்.

3. நகர்புற எல்லையிலிருந்து 8 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள அனைத்து புறம்போக்கு நிலங்களையும் அரசின் பிற்கால தேவையைக்கருதி தடை ஆணைப் புத்தகத்தில் பதிந்திட வேண்டும்.

   தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை பாதுகாப்பது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும். சரக வருவாய் ஆய்வாளர்கள் கிராமங்களில் முகாமிடும்பொழுது இத்தகைய நிலங்களை பார்வையிட்டு ஆக்ரமணம் ஏதும் இருப்பின் உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம/ வட்ட அளவில் உள்ள தடையாணைப் பதிவேடு கோட்ட மற்றும் மாவட்ட அளவில் பராமரிக்கப்படும். பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரி பார்த்து ஒவ்வொரு வருடம் ஜீலை 20-ம் தேதிக்குள் சான்று பெற வேண்டும்.

நகல் மனுக்கள்

   பொது மக்கள் தங்களுக்கு தேவைப்படும் வருவாய்க்கணக்குகளின் நகல்கள் மற்றும் இதர ஆணைகளின் நகல்களை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களிலிருந்து உரிய விண்ணப்பம் அளித்து பெற்றுக் கொள்ளலாம். மேற்படி ஆவண நகல்கள் நேரிடையாக அவர்களுக்குத் தொடர்புடைய தாகவோ அல்லது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுபவையாகவோ இருத்தல் வேண்டும். இரகசியத் தன்மை உடைய ஆவணங்கள் தவிர்த்து இதர ஆவணங்களின் நகல்கள் வழங்கப்படும் ஆவணங்களின் நகல்கள் பெற தேடு கூலியாக ஒவ்வொரு ஆவணத்திற்கும் முதல் வருடமாக இருப்பின் ரூ.10/-ம் அதற்கு முந்தைய ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.5/-ம் செலுத்திட வேண்டும். ஆவணங்களின் நகல்கள் வட்ட அலுவலகங்களில் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியராலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராலும் சான்றொப்பமிடப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலரால் சான்றொப்பமிடப்படுதல் வேண்டும்.
(வருவாய் நிலை ஆணை எண்-173 மற்றும் மாவட்ட அலுவலக நடைமுறை நூல்)

 

வருவாய் ஆய்வாளர்
கிராம நிர்வாக அலுவலர்
மண்டலதுணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர்
கிராம கணக்குகள்
வட்ட கணக்குகள்
பயிராய்வு
ஆக்ரமணம்
பட்டா மாறுதல்
வீட்டுமனை மற்றும் நில ஒப்படை
நில எடுப்பு
நிலமாற்றம் / நில உரிமை மாற்றம்
நில குத்தகை
அரசால் வாங்கப்படும் நிலங்கள் / நில பரிவர்த்தனை
நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பு
தடையாணை புத்தகம் / நகல் மனுக்கள்
மரங்கள் வனக்குற்றங்கள்
சான்றுகள்
வருவாய் வசூல் சட்டம்
வறியவர் வழக்கு
முதியோர் உதவித்தொகை திட்டம்
நலிந்தோர் குடும்ப நல திட்டம்
விபத்து நிவாரண திட்டம்
புதையல்
படைக்கலச்சட்டம்
வருவாய்த்துறை தொடர்புடைய குற்ற விசாரணை முறை சட்டம்