புதையல்

   ஏதாவது மதிப்புடைய எந்தவொரு பொருளும் பூமிக்குள் புதைந்திருந்து அது கண்டுபிடிக்கப்பட்டால் அது “புதையல்” எனப்படும். இந்திய புதை பொருள் சட்டம் 1878 பிரிவு 4ன் படி ரூ.10/-க்கு மேற்பட்ட மதிப்புடைய எந்தவொரு புதை பொருளும் கண்டறிப்பட்டால், புதையலை கண்டுபிடித்தவர் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாக விவரத்தை தெரிவித்து கண்டறியப்பட்ட புதையலை அருகில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும். புதையலை கண்டெடுத்தவர் பிரிவு 4ன் கீழ் ஒப்படைக்கவோ தகவல் அறிவிக்காமல் மறைக்கவோ செய்தால் புதையல் மதிப்பின் பங்கு தொகை வழங்க வேண்டியதில்லை. மேலும் ஒரு வருடம் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டையுமே விதிக்கலாம். புதையல் கண்டெடுத்த இடத்தின் உரிமையாளர் தகவல் அளிக்காவிட்டால் சட்டப்பிரிவு 20 மற்றும் 22ன் கீழ் ஆறு மாதம் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டையும் விதிக்கலாம்.

   புதையல் கண்டுபிடிக்கப்பட்ட விவரம் குறித்து எவரும் எழுத்து மூலமான தகவல் தெரிவிக்காவிடில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரே அப்பொருளை கைப்பற்றி கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும் சட்டப்பிரிவு 5(ஏ)ன் படி புதைபொருள் விவரம் குறித்த அறிவிக்கை ஒன்றினை மாவட்ட ஆட்சியர் அரசிதழில் விளம்பரப்படுத்திட வேண்டும். புதையலுக்கு உரிமை கோருபவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்பாக தங்களை நேரடியாகவோ அல்லது அவரது முகவர் மூலமாகவோ குறிப்பிட்ட தேதியன்று ஆஜராகி விவரம் தெரிவித்திட வேண்டுமென குறிப்பிடப்பட்டு மேற்கண்ட அறிவிக்கை விளம்பரப்படுத்தப்பட வேண்டும். அதே சமயம் புதைபொருள் விவரங்கள் குறித்து அரசு அருங்காட்சியகத்திற்கு தகவல் அனுப்பி அருங்காட்சியகத்தில் வைக்க தேவையானதா என்பதை அறிந்திட வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டிணம் மாவட்டங்களைப் பொறுத்தவரை தஞ்சாவூர் கலைக்கூட செயலாளரிடம் விவரம் கோர வேண்டும்.

   புதையல் பொருள்களின் மீது உரிமை கோருபவர்களது கோரிக்கை தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்படின் புதைபொருள் சட்டப்பிரிவு 9ன்படி புதைபொருள் மீது எவருக்கும் உரிமையில்லையென மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து ஆணை பிறப்பிக்கலாம். இந்த ஆணையின் மீது பாதிக்கப்பட்டதாக கருதினால் வருவாய் நிர்வாக ஆணையருக்கு மேல் முறையீடு செய்து கொள்ளலாம். இத்தகைய உரிமையற்ற புதைபொருளை அரசு அருட்காட்சியகத்திற்கு அனுப்பிடலாம். அருங்காட்சியகத்திற்கு தேவைப்படாத இத்தகைய புதை பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து தொகையினை அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.

   புதைபொருள் மத சம்பந்தப்பட்ட பொருளாக (விக்ரகங்கள் போன்றவை) இருப்பின் அரசு அருங்காட்சியகத்தின் அனுமதியை எதிர்நோக்கி வருவாய்த்துறை அதிகாரிகளே எடுத்து வரலாம். மேலும், உள்@ர் மக்களால் இதனை வழிபடுதற்குரிய பொருளாக கருதி கோரப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர் தன் விருப்பு அதிகாரத்தின்படி முடிவு மேற்கொள்ளலாம்.(அரசாணை எண் 1187 வருவாய்த்துறை நாள்:19.3.62)
சட்டப்பிரிவு 3 ன் கீழ் மாவட்ட ஆட்சியருக்காக செயல்பட, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை நியமனம் செய்திட அனுமதித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(அரசாணை எண் 113 வருவாய்த்துறை நாள்:18.1.1945)

 

வருவாய் ஆய்வாளர்
கிராம நிர்வாக அலுவலர்
மண்டலதுணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர்
கிராம கணக்குகள்
வட்ட கணக்குகள்
பயிராய்வு
ஆக்ரமணம்
பட்டா மாறுதல்
வீட்டுமனை மற்றும் நில ஒப்படை
நில எடுப்பு
நிலமாற்றம் / நில உரிமை மாற்றம்
நில குத்தகை
அரசால் வாங்கப்படும் நிலங்கள் / நில பரிவர்த்தனை
நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பு
தடையாணை புத்தகம் / நகல் மனுக்கள்
மரங்கள் வனக்குற்றங்கள்
சான்றுகள்
வருவாய் வசூல் சட்டம்
வறியவர் வழக்கு
முதியோர் உதவித்தொகை திட்டம்
நலிந்தோர் குடும்ப நல திட்டம்
விபத்து நிவாரண திட்டம்
புதையல்
படைக்கலச்சட்டம்
வருவாய்த்துறை தொடர்புடைய குற்ற விசாரணை முறை சட்டம்