வட்டாட்சியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்வதினை கண்டித்து 8 நாள் போராட்டம்

 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், சேலம் மாவட்ட மையம்.

அன்பார்ந்த சேலம் மாவட்ட வருவாய்த்துறை சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் புரட்சிகரமான காலை வணக்கம்.....!

இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வட்டாட்சியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்திடல் வேண்டும் என்ற உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்திரவினை இரத்து செய்திட மாநில மையத்தின் போராட்ட அறைகூவல்

இடைவிடாத 8' நாள் போராட்ட களம்

28.02.2019 & 01.03.2019
இரண்டு நாள் மாவட்ட தலைநகர் மற்றும் அனைத்து வட்டக்கிளைகளிலும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம்

02.03.2019 & 03.03.2019
ஒத்துழையாமை இயக்கம்

 

 

 

 

 

 

04.03.2019, 05.03.2019 & 06.03.2019
மூன்று நாட்கள் மாவட்டம் முழுவதும் உள்ளிருப்பு போராட்டம்

 

மேற்படி இந்த போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுக்கும் போதெல்லாம் முகம் சுளிக்காமல் போராட்ட களம் கண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த போராட்டத்தின் வெற்றி உங்களுக்கானது...!
உங்களின் அஞ்சாத நெஞ்சுரத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி....!
போராட்ட களத்தில் புறமுதிகிடா உங்களின் வீரத்திற்கு கிடைத்த வெற்றி....!
உங்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி....!
இந்த போராட்டத்தில் உங்களோடு பயணப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்...!

எனது 20 வருட கால சங்க வாழ்க்கையில் பல்வேறு கோரிக்கைகளுகாக எத்தனையோ போராட்டங்களில் பங்கேற்று இருக்கின்றேன், எந்தனையோ போராட்டங்களை வழிநடத்தி இருக்கின்றேன், ஆனால் ஒற்றை கோரிக்கையின் வெற்றிக்காக போராட்ட களம்கண்டது இதுதான் முதல்முறை என உணர்கின்றேன்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்திற்கு இனம்,மொழி, மதம், ஜாதி, பதவி என எதுவும் இல்லை, இதில் எந்த பாகுபாடு இல்லாத உன்னதமான ஸ்தாபனம்
இந்த போராட்டம் சேலம் மாவட்டத்தில் மிக எழுச்சியாக நடைபெற கடுமையாக உழைத்திட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கும், வட்டக்கிளை நிர்வாகிகளுக்கும் மற்றும் சங்க முன்னணி தோழர்களுக்கும்....!
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் இந்த போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கும், தமிழ்நாடு ஊரகவளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்திற்கு புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

"அசாத்தியமான ஒன்றினை சாத்தியமாக்க உழைக்கும் வர்க்கம் கிளர்ந்து எழுமானால் அது தான் புரட்சி....!"

இந்த போராட்டத்திற்கான பண்பட்ட மாநில தலைமையின் விடாபிடியான கொள்கை முடிவு, அசைக்கமுடியாத போராட்ட வீயூகம், போராட்ட வெற்றிக்கு வழிகாட்டிய சிறந்த செயல்பாடு, ஊழியர் நலனிற்காக அஞ்சாத தியாக உழைப்பு இது தான் இந்த வெற்றிக்கு காரணம்....! தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வரலாற்றில் மீண்டும் ஒரு பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டிய பதிவு

இந்த போராட்டம் ஒரு வேலை நீர்த்துப்போய் நாம் பின்வாங்கி இருந்தால், மாவட்ட மாறுதல் உத்திரவு இரத்தாகாது இருந்திருந்தால் நம் நிலைமையினை எண்ணிபாருங்கள்....!
இன்று வட்டாட்சியர்கள் நாளை அனைத்து நிலை அலுவலர்களையும் மாவட்ட மாறுதல் செய்யமாட்டார்கள் என என்ன? உத்திரவாதம் உள்ளது. நியாயமான இந்த போராட்டம் நமது ஒற்றுமையின் வெளிப்பாடே...!
நாம் வருவாய்த்துறையில் கடக்கவேண்டிய தூரம் மிகவும் அதிகம் அதற்கான பாதையானது புல்தரைகள் அல்ல...! பூஞ்சோலைகள் அல்ல...! நாம் கடக்க வேண்டிய பாதை கரடு முரடான முட்கள் நிறைந்த பாதை பல போராட்டங்களை நடத்திதான் கடக்க வேண்டும் என உணர்வுபூர்வமாக உணர்ந்து சங்க செயல்பாடுகளில் உங்களை முழுமையாக இணைத்துகொண்டீர்கள் என்று சொன்னால் எதுவும் சாத்தியமே....!

இந்த மாவட்ட மாறுதல் உத்தரவு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் மிக நெருக்கடியான சூழ்நிலைகளை ஊழியர்களுக்கு எதிராக ஏற்படுத்திய நிலையில் நமது மாவட்டத்தில் நமது ஊழியர்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்காமல் மாவட்ட நிர்வாகிகள் எத்தனை முறை சென்றாலும் மறுக்காது அழைத்து பேசி இந்த உத்திரவினை இரத்து செய்ய பல்வேறு வழிமுறைகளை எடுத்துசொல்லி மாவட்ட மாறுதலால் ஏற்படும் விளைவுகள் பற்றி மேல்நிலை அலுவலர்கள் கவனத்திற்கு தைரியமாக எடுத்து சொல்லிய மரியாதைக்குரிய. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், திரு.மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கும்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களுக்கு, மற்றும் மாவட்ட மேலாளர்(பொது) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் மகத்தான வெற்றி பெற எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் தோழமையுடன்,
வெ.அர்த்தனாரி,
மாவட்ட செயலாளர்,

 
சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்