மத்திய செயற்குழு கூட்டம்

   தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தமிழகம் முழுவதும் பரவிகிடகின்ற 12,000 வருவாய்த்துறை ஊழியர்களின் விடிவெள்ளியாக பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகின்றது தமிழகத்தில் பல்வேறு துறைவாரி சங்கங்களும் பொது சங்கங்களும் இருந்தாலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் இல்லாமல் எந்த போராட்டத்தினையும் முன்னெடுக்காது காரணம் தமிழககத்தில் மிக வலிமையான உன்னதமான போர்குணம் கொண்ட சங்கம் நமது சங்கம் நமது சங்கத்தின் சட்டதிட்டங்களும் ஜனநாயகரீதியான நடவடிக்கைகளும் ஊழியர்களின் கட்டுக்கோப்பான ஒற்றுமையும் தான் இதற்கான காரணங்கள் அதன் அடிப்படையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலமையம் மாவட்ட சங்கங்களை திறம்பட செயல்பட துணையாக இருந்து வருகிறது.

   தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் உச்சபட்ச அமைப்பு என்பது மத்திய செயற்குழு கூட்டமாகும் மாநிலமையத்தின் எந்தவொரு முடிவானாலும் தன்னிச்சையாக அறிவிக்க இயலாது ஏனெனில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற 32 மாவட்டங்களின் கருத்துக்களை மத்திய செயற்குழு கூட்டம் நடத்தி அதன் பின்பாக எந்தமுடிவாக இருந்தாலும் மாநில மையம் அறிவிக்கும் ஜனநாயகம் மிக்க சங்கம் நமது சங்கம் என்றால் மிகையாகாது.

   மத்திய செயற்குழு கூட்டமானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சியின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது நமது சங்கத்தினை பொறுத்தமட்டில் மாநில மையத்தின் முடிவே இறுதியானது
நாம் பெற்ற அனைத்து சலுகைகளும் யாரும் நமக்கு இனாமாக வழங்கியது இல்லை இரத்தம் சிந்தி சிறை சென்று போராடி பெற்றவையே என்பதனை நீங்கள் உணர்வுபூர்வமாக உணரவேன்டும்.
போராட்டங்கள் ஒருபோதும் ஓயாது......!
உழைக்கும் வர்க்கம் போராட்டம் ஒருபோதும் தோற்காது.....!

என்றும் தோழமையுடன்
வெ.அர்த்தனாரி,
மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்