பயிலரங்கம்

தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி -- வேலை நிறுத்தம் உறுதி

  • தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில் இரவுக்காவலர், ஈப்பு ஓட்டுநர், மால்சி பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல்
  • வருவாய்த்துறையில் காலியாக உள்ள 6000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புதல்
  • வருவாய்த்துறையின் சிறப்புத்தன்மையைக் கருத்தில் கொண்டு வருவாய் உதவியாளர் , வருவாய் இளநிலை உதவியாளர் பெயர் மாற்றம்
  • வட்டாட்சியர் வருவாய் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்கள், பட்டதாரி இளநிலை உதவியாளர்கள் தட்டச்சர்கள் ஊதிய மாற்றம்
  • கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியினை வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கக் கோருதல்.
  • உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24.06.2015 மற்றும் 25.06.2015 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
  • இப்போராட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றும் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரையிலான 12000 க்கும் மேற்ப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 06.06.2013 முதல் நாளது வரையில் அனைத்து மாநில நிர்வாகிகளும் அன்னத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் அவசியம் குறித்து பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.
  • இந்நிலையில் தமிழக அரசின் அழைப்பினை ஏற்று 19.06.2016 அன்று மாலை 6 மணியளவில் வருவாய்த்துறை அரசு செயலாளர் அவர்களின் அறையில் வருவாய்த்துறை அரசு செயலாளர் மற்றும் தலைமைச்செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோருடன் எங்கள் சங்க மாநில நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஏற்கனவே 23.09.2014 அன்று மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுடனும், 29.01.2015 அன்று வருவாய்த்துறை அரசு செயலாளருடனும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகள் மீது இது நாள் வரை எவ்வித அரசாணைகளும் பிறப்பிக்கப்படாத நிலையில் வெற்றி வாக்குறுதிகள் மட்டுமே மீண்டும் அளிக்கபட்ட காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது.
  • மாலை 8மணியளவில் சங்க மாநில மையக் கட்டிடத்தில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், "அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தையடுத்து திட்டமிட்டப்படி 24.06.215 மற்றும் 25.06.2015 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளவது" என் முடிவு செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரையிலான 12000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கிறார்கள். வருவாய்த்துறையின் அனைத்துப் பணிகளும் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

இப்படிக்கு

மாவட்டச்செயலாளர்

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்