ஜாக்டோ ஜியோ 2019-ஜனவரி - 22
காலவரையற்ற வேலை நிறுத்தம்

   தமிழகத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் மிக முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகளான புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்துதல், 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க கோருதல், அரசாணை 56, 101-யினை ரத்து செய்திடல் அரசு துறையில் இருந்து வரும் 3,00,000 -க்கு மேலான காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற 9 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தினை அறிவித்தது.
   அன்று அரசு எதிராக திட்டமிட்டப்படி மிக எழுச்சியுடன் ஜனவரி-22 அன்று தமிழகம் முழுவதும் ஏழு லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கியது, அதன் தொடர்ச்சியாக 23.01.2019 மறியல் போராட்டம் சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் அதிக அளவில் பங்கேற்க வெகு எழுச்சியாக நடைபெற்றது. அன்றைய மறியல் போராட்டத்தில் காவல்துறை அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது, இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 87 நபர்கள் பங்கேற்றனர்.    போராட்டத்தின் தன்மை வெகுவாக திசைமாறி அடுத்த நாள் 24.01.2019 அன்று கட்டுக்கடங்காத கூட்டத்துடன் மறியல் போராட்டத்தில் இறங்கியது ஜாக்டோ-ஜியோ அன்றைய தினம் காவல் துறையின் அடக்குமுறை அதிகமாக இருந்தது அந்த நிலையிலும் பெண் ஊழியர்கள் எதற்கும் அஞ்சாது களத்தில் நின்றனர் தமிழக அரசு ஒரு புறம் அடக்குமுறையினை கட்டவிழ்த்து போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது 17B, 17A குற்றகுறிப்பானைகள் ஏற்பபடுத்தப்படும் எனவும்.    போராட்டத்தினை தூண்டுபவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை பாயும் எனவும் அறிவித்தது. ஆசிரியர்கள் பணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும். தவறும் பட்சத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்தது. 24.01.2019 அன்றைய மாநில போரட்டத்தில் 1500 மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சேலம் மாவட்டத்தில் கைதானார்கள் அதில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 112 பேர் கைதாகினர் சேலம் மாவட்டத்தினை பொருத்தமட்டில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணைதலைவர் திரு.பெ.ச.லெனின் உள்பட 25 நபர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிபதி இவர்களை 08.02.2019 வரை சிறையில் அடைக்க உத்திரவிட்டார். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.
   அரசின் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் அடிபணிய தொடங்கியது ஆசிரியர் சங்கங்கள், அதன் விளைவாக 28.01.2019 போராட்டத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் வெகுசிறப்பாக மாநிலப் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியலிலும் எராளமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கைதாகினர் அன்று இரவும் கைது நடவடிக்கை அரங்கேற்றப்பட்டு 53 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் காலவரையற்ற போராட்டம் தொடர்ந்த நிலையில் 29.01.2019 ஆம் தேதி போராட்டம் ஆர்பாட்டமாக அரசு ஊழியர்கள் பங்கேற்க சிறப்பாக நடை பெற்றது போராட்டம் 30.01.2019 வரை 9 நாட்களாக தொடர்ந்த நிலையில் அன்று மாலை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்த நிலையில் அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்.
   தமிழக அரசின் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் சிறிதும் அஞ்சாமல் 25.01.2019 நாள் மறியல் போராட்டம் திட்டமிட்டபடி தலைநகரில் அரங்கேறியது, இதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 2000- திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறை கைது செய்து பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அன்றைய போராட்டத்தில் வருவாய்த்துறையினை சார்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 98 நபர்கள் கைதாகி சிறை கண்டனர். போராட்டத்தினை கட்டுப்படுத்தும் நேர்வில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகினர் மீதும் மற்ற துறைவாரி சங்க நிர்வாகத்தினர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டது. அன்று இரவே முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையால் பொய்வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்க திட்டம் தீட்டப்பட்டது கைதும் தொடர்ந்தது ஒரு சில மாவட்டங்களில் நீதிபதிகள் கைதான நிர்வாகிகளை சிறையில் அடைக்க மறுத்து தனது சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர்.
   எழுச்சிமிகு இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றும் கூட எந்த ஒரு முடிவினையுன் எட்டாமல் ஒத்திவைக்கப்பட்டது ஜாக்டோ-ஜியோ அணுகுமுறையும் ஒரு காரணம், தமிழக அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் அனைவரும் ஊதிய உயர்வு மட்டுமே கோரி போராட்டம் செய்வதாக பொதுமக்களிடம் மேடைகளில் பேசி பொதுமக்களை நமக்கு எதிராக திசை திருப்பியும் ஒரு காரணமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு இறுதிவரை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசாமல் திட்டமிட்ட பழி தீர்த்தது என்பதுதான் உண்மை என்றாலும், இந்த போராட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவு பெற்றிருந்தாலும் இந்த போராட்டக்களத்தில் பல இளம்தலைமுறை போராளிகளை உருவாக்கிய பெருமை நமக்குண்டு. அடுத்த கட்ட அரசியல் நகர்விற்கு இந்த போராட்டம் ஒரு மணி மகுடம் என்பதனை உணர செய்திருக்கிறது என்பது மட்டுமே நிதர்சனம்.
             ஒன்றாய் இணைவோம்......!
             உரிமைகளை வெல்வோம்.......!

 
சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்