மனித நேய நடவடிக்கைகள்

   சேலம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஊழியர்நலன் மற்றும் மனிதநேய நடவடிக்கைகளில் உருப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்போடு திறன்பட செயலாற்றி வருகின்றது. நமது உரிமைக்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றில் பங்கேற்பது மட்டும் அல்லாது உறுப்பினர்களின் பாதிப்புகளிலும் மனித நேயத்துடன்பெரும் பங்காற்றி வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.

   அதன் அடிப்படையில் உறுப்பினர்களிடம் இருந்து நிதியாக வசூல் செய்யப்பட்டு உறுப்பினர்களின் மருத்துவ செலவிற்காக வழங்கப்பட்ட தொகையின் விபரங்கள் இங்கு பதிவிடப்படுகிறது.

வ.எண்
பெயர்
விவரம்
செலுத்திய தொகை
1.
திரு. செந்தில்
முதுநிலை வருவாய் ஆய்வாளர்
தாயாரின் மருத்துவ செலவிற்காக.
80,000/-
2.
திரு.ஹரிகரன்
மு.நி.வ.ஆ
விபத்து நிவாரணம் வழங்கப்பட்டது.
1,00,000/-
3.
திரு.ஆறுமுகம்
அலுவலக உதவியாளர்
விபத்து நிவாரணம் வழங்கப்பட்டது.
25,000/-
4.
திரு.சுந்தரேசன்
துணை வட்டாட்சியர்
திடீரென மரணமடைந்ததால் குடும்ப சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ஈமசடங்கிற்காக வழங்கப்பட்டது.
25,000/-
5.
திருமதி.நிஷா
தட்டச்சர்
தாயார் மருத்துவ செலவிற்காக.
1,00,000/-
6.
திரு.செந்தில்குமார்
மு.நி.வ.ஆ
மருத்துவ செலவிற்காக.
1,80,000/-

   இவைகள் மட்டும் அல்லாது சேலம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்ப்பட்ட கடும் வெள்ள பாதிப்பால் மக்கள் பெரும் சேதத்திற்கு ஆளான நிலையில் நமது சங்கத்தின் உறுப்பினர்களின் மனிதநேய எண்ணத்தில் நிதியாக வழங்கிய தொகையின் அடிப்படையில் ரூ.1,00,000/-க்கான நிவாரண பொருட்களை 14-08-2018 தேதி அன்று மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களின் முன்நிலையில், ரயில் மூலமாக இரண்டு கிராம நிர்வாக அலுவலர் பாதுகாப்பில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு அனுப்பி அம்மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விடாமுயற்சியும், விஸ்வரூப வெற்றியும்

அன்பார்ந்த சேலம் மாவட்ட வருவாய்த்துறை சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் புரட்சிகரமான மாலை வணக்கம்...!

    நமது வருவாய் அலகில் வட்டாட்சியராக பணியாற்றி தேர்தல் பணியில் இருந்த போது கடந்த 15.03.2019 அன்று இயற்கை எய்திய ஆருயிர் தோழன் திரு.ரமேஷ், தனி வட்டாட்சியர் (அகதிகள் மறுவாழ்வு) சேலம், அவர்களின் குடும்பத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து போதிய நிதியினை பெற்றுதர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியதின் பேரில் இங்கிருந்து முன்மொழிவுகள் இறப்பிற்கான நிதியினை பெற தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று தேர்தல் ஆணையம் இறந்த திரு.ரமேஷ், குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகையாக ரூ.15,00,000/- ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
___________
    நமது கோரிக்கையினை ஏற்று இந்த முன்மொழிவினை அனுப்பி இழப்பீட்டினை பெற்றுதர அயராது உழைத்த மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் திருமதி.ரோகிணி பாஜிபாக்ரே, அவர்களுக்கும், மரியாதைக்குரிய,திரு.மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), திரு.ரவிசந்திரன், அவர்களுக்கும், இதற்காக அரும்பாடுபட்ட வட்டாட்சியர் (தேர்தல்),திரு.திருமாவளவன், அவர்களுக்கும்,மற்றும் மாவட்ட மேலாளர்(பொது),திரு.பிரகாஷ், அவர்களுக்கும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தொகையினை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற நல்முறையில் வழிகாட்டி தொடர்ந்து ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்ட மாநில தலைவர் திரு.குமரேசன்,அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

என்றும் தோழமையுடன்,
மாவட்ட நிர்வாகிகள்,

TNROA, Salem


 
மறைதிரு.சிவகுமார் (இ.நி.வ.ஆ) அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி
சேலம் மாவட்ட வருவாய்த்துறை சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்...!
    சேலம் மாவட்டம் வருவாய் அலகு எடப்பாடி வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிவந்த திரு.சிவக்குமார், உடல்நிலை குறைவால் கடந்த 24.10.2021 ஆம் தேதி இறந்த விட்டார். இறந்த அவரின் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மிகவும் வறிய நிலையில் இருப்பதாக கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வட்ட நிர்வாகிகள்/பொறுப்பாளர் அந்த குடுப்பத்திற்கு நிதி உதவி செய்திட வேண்டும் என மாவட்ட மையத்தினை அனுகியதின் அடிப்படையில் எடப்பாடி வட்டகிளை சார்பாக ரூ.50,000/- ம் வசூல் செய்யப்பட்டது. மீளவும் மாவட்ட மையத்தின் சார்பாக மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை சகோதர,சகோதரிகளின் உதவியுடன் ரூ.38,500/- வசூல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் ரூ.88,500/- வசூலான நிலையில் மாவட்ட மையத்தின் பொது நிதியில் இருந்து ரூ.11,500/- வழங்கப்பட்டு ரூ.1,00,000/- த்தினை இறந்த திரு.சிவக்குமார், மனைவி மற்றும் குழந்தைகளிடம் திரு.விமல்பிரகாஷ், வட்டாட்சியர், தலைமையில் மாவட்ட தலைவர் திருமதி. வி.வள்ளிதேவி, அவர்களால் வழங்கப்பட்டது என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த தொகையினை விரைவாக வசூல் செய்து வழங்கிய மாவட்ட பொருளாளர் திரு.முருகபூபதி, அவர்களுக்கு மிக்க நன்றி...! இந்த தொகையினை வசூல் செய்த எடப்பாடி வட்டக்கிளை நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள்,மற்றும் சங்க முன்னணி தோழர்கள், அனைவருக்கும் நிதி வழங்கிய மாவட்டம் முழுமையும் உள்ள அனைத்து வருவாய்த்துறை உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
__ என்றும் தோழமையுடன்,
வெ.அர்த்தனாரி,
மாவட்ட செயலாளர்,
 
திரு.ராதாகிருஷ்ணன் (இ.நி.வ.ஆ) அவர்களுக்கு நிதியுதவி

சேலம் மாவட்ட வருவாய்த்துறை சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்...! நெஞ்சார்ந்த நன்றிகளும், மனமார்ந்த வாழ்த்துக்களும்...!
    சேலம் வருவாய் அலகு மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்று வரும் திரு.இராதாகிருஷ்ணன், அவர்களுக்கு திடீர் என மாரடைப்பு ஏற்ப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெங்களூர் நாராயண இருதாலயா மருத்துவமனையில் open Herat surgery செய்யப்பட்டது. அதற்கான செலவீன தொகை ரூ.4,68,000/- ம், இந்த தொகையினை NHIS - அரசு ஊழியர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடாக பெற கடுமையான முயற்சிகள் மேற்க்கொண்டும் அது தோல்வியில் முடிந்தவிட்டது. இந்த நிலையில் திரு.இராதாகிருஷ்ணன், குடும்ப சூழ்னிலையினை கருதில் கொண்டு TNROA காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.50,000/-மும், மேட்டூர் வட்டக்கிளை சகோதர,சகோதரிகள் கருணையுள்ளத்தோடு வழங்கிய நிதி ரூ.63,500/-மும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,சேலம் வட்டம்,சேலம் தெற்கு வட்டம், காடையாம்பட்டி வட்டம்,ஓமலூர் வட்டம்,எடப்பாடி வட்டம் மற்றும் ஆத்தூர் வட்டம் உள்ளிட்ட பிற அலுவலக சகோதர,சகோதரிகள் உள்ளார்ந்த அன்போடு வழங்கிய ரூ.36,500/-மும்,சேர்த்து ஆக மொத்தம் ரூ.1,50,000/-ம் ஆகின்றது. மேற்ப்படி அறுவை சிகிச்சை முடிந்து நேற்று இல்லம் திரும்பிய திரு.இராதாகிருஷ்ணன்,அவர்களை இன்று (30.04.2022) மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் அவரின் இல்லத்திற்கு மேட்டூர் வட்டக்கிளை நிர்வாகிகளுடன் நேரில் சென்று உடல்நலம் விசாரிக்கப்பட்டது. மேலும் மருத்துவ செலவீன இழப்பீடு தொகையாக ரூ.1,50,000/-ம் வழங்கப்பட்டது என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன். TNROA காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.50,000/- வழங்கிய திட்டத்தின் தலைவர் / செயலாளர் ஆகியோர்களுக்கும், மேட்டூர் வட்டத்தின் சார்பாக ரூ.63,500/-யினை வழங்கிய மேட்டூர் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக சகோதர, சகோதரிகளுக்கும் இந்த தொகையினை வசூல் செய்ய ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுத்த மேட்டூர் வட்டாட்சியர் திரு.முத்துராஜா, அவர்களுக்கும், கோட்டாசியர் அவர்களின் நேர்முக உதவியாளர் திருமதி.விஜி,வட்டாட்சியர் அவர்களுக்கும், முன்னாள் மத்திய செயற்க்குழு உறுப்பினர் திரு.வெற்றிவேல், அவர்களுக்கும், மற்றும் மேட்டூர் வட்டக்கிளை தலைவர் / செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும், அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் தலைமையிடம் உள்ளிட்ட அனைத்து வட்டக்கிளைகளில் இருந்தும் நிதி வழங்கிய அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், வீரம் செறிந்த வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.


__ என்றும் தோழமையுடன்,
வெ.அர்த்தனாரி,
மாவட்ட செயலாளர்,

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்