ஜீவா ஒரு சகாப்தம்

   சேலம் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்களின் பாதுகாவலன், ஊழியர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த வீரன் சேலம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க வரலாற்றில் ஜீவா என்றும் மறையாத சகாப்தமாவார்.

   வருவாய்த்துறை ஊழியர்கள் அதிகார வர்கத்தால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலகட்டம் 1995 ஊழியர்கள் மீதான அடக்குமுறைகள் எல்லையில்லாமல் கொடுக்கப்பட்ட நேரம், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் ஒருபுறம், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி பணியாற்றி வந்த ஊழியர்கள் மறுபுறம், இதனை களைய சங்கம் ஒருபுறம் போராடி வந்தாலும், அதிகாரத்தினையும், அதிகார துஷ்பிரயோகங்களையும், எதிர்த்து குரல் கொடுக்க மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கிள் விழைந்த விடிவெள்ளியாக முளைத்தவர் தான் அருமை சகோதரர் தோழர்.திரு.A.ஜீவகாருண்யம், எல்லையில்லா வேகம் கொண்ட காட்றாட்டு வெள்ளம் போல் ஊழியர்கள் நலனிற்காக வாழ்ந்தவர் சேலம் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்களால் “ஜீவா” என அன்பாக அழைக்கப்பட்ட உரிமையின் குரல் என்றால் மிகையாகது.

   சேலம் மாவட்டம் வருவாய்த்துறை ஊழியர்களின் நலனிற்காகவும், உரிமைகளை மீட்கவும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தேர்தலில் முதல் முதலில் 1997-ம் ஆண்டு தேர்தல் களம் கண்டு வருவாய்த்துறை ஊழியர்களின் ஒன்றுபட்ட கருத்தால் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயலாளராக பதவியேற்றவுடன் தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்களுக்கான அடிப்படை பிரச்சனைகளை சரி செய்ய அவர் எடுத்துக்கொண்ட அக்கறை ஊழியர்களின் உரிமைக்காக அவர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள், ஊழியர்கள் மீதான அதிகாரிகளின் அடக்குமுறைக்கு எதிராக அவர்களின் செயல்பாடுகள் ஊழியர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சங்கத்தினை புதிய பரிமாணத்தில் செயல்பட வைக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, ஊழியர்கள் மீதான அவரின் அன்பும், அரவணைப்பும் அவர் தொடர்ந்து சேலம் மாவட்டம் செயலாளராக 1997 முதல் 2012 வரை 16 ஆண்டுகளும், 2012 முதல் 2017 வரை 5 ஆண்டுகள் மாவட்ட தலைவராகவும் பதவி வகித்த மாபெரும் தலைவர் தான் வருவாய்த்துறை “இன போராளி” ஜீவா......!

ஜீவாவும் சிறையும்

   சேலம் மாவட்டம் வருவாய்த்துறை ஊழியர்களின் நலனிற்காக தொடர்ந்து 21 ஆண்டுகள் அயராது உழைத்த தியாக தலைவனின் சிறை வாழ்க்கையும், நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையும், தமிழக அரசு அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் உரிமைகளை பறித்த 2003-ம் ஆண்டு வீறுகொண்டு எழுந்த ஆரசு ஊழியர், ஆசிரியர்களின் சங்கங்கள் அதன் போராட்ட வடிவமே அன்று உருவான “ஜாக்டோ-ஜியோ” அமைப்பு 02.07.2003 முதல் பறிக்கப்பட்ட ஊரிமைகளை மீட்க காலவரையற்ற போராட்ட அறிவிப்பு சேலம் மாவட்டத்தினை பொருத்தமட்டில் அந்த போராட்டத்தினை முன்னெடுத்து திறம்பட செயலாற்றி சங்கம் “ஜீவா” தலைமையினை தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் என்றால் அது மிகையாகது.

   02.07.2003 முதல் தொடங்கப்படும் காலவரையற்ற போராட்டத்திற்காக தயாரிப்பு பணிகள், பிரசாரம், ஊழியர் ஒருங்கிணைப்பு என சங்கம் தங்களின் செயல்பாடுகளை சிறப்புற செய்து வந்த நேரம், போராட்ட தேதி நெருங்கி வரும் வேலையில் அரசின் அடக்குமுறைக்கான அச்சுறுத்தல்கள் தொடங்கின ஆனால் சங்கங்கள் அதற்க்கு செவி மடுக்கவில்லை. தமிழக அரசின் ஆணவ போக்கு சங்கத்தின் முக்கிய தலைவர்கள் போராட்டத்திற்கு முன்பாகவே கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டது.

   நான் அப்போது ஓமலூர் வட்டக்கிளையில் பணியாற்றி வந்தேன். அப்போது நான் வட்டக்கிளை செயலாளராகவும், மறைந்த திரு.சத்குரு அவர்கள் வட்டக்கிளை தலைவராகவும், போராட்ட விளம்பரம் மற்றும் பிரசாரங்களை செய்து வந்த நிலையில், என்னையும் திரு.சத்குரு மற்றும் திரு.அபுபக்கர் ஆகிய மூன்று பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பொன்மாணிக்கவேல் அவர்களின் உத்தரவின் பேரில் 30.06.2003அன்று மாலை ஓமலூர் காவல் ஆய்வாளரால் கைது செய்யப்பட்டு அன்று நள்ளிரவு 1.00 மணிக்கு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். நாங்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், வெளியில் இருந்து மாவட்ட தலைவர் திரு.சக்திவேல் அவர்களும், மாவட்ட செயலாளர் திரு.A.ஜீவகாருண்யம் அவர்களும் போராட்ட ஆயத்த பணிகளை செய்தனர்.

   இந்நிலையில் காலவரையற்ற போராட்டம் தொடங்கிய நாளான 02.07.2003 அன்று மாலை மாவட்ட தலைவர் (ம) மாவட்ட செயலாளர் உட்பட 17 வருவாய்த்துறை ஊழியர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அன்று நள்ளிரவு சேலம் மத்திய சிறையில் எங்களுடன் அடைக்கப்பட்டனர். காவல் துறையானது அரசு ஊழியர்களை இது போன்ற போராட்ட நிகழ்வுகளின் பொது கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்ப்பட்டால் கைது செய்து ஒரே இடத்தில் வைப்பார்கள் என்பதுதான் பொதுவான கருத்து, ஆனால் இப்போராட்டத்தில் கைதான அனைவரும் கைதி எண் கொடுக்கப்பட்டு ஒரு அறைக்கு மூன்று நபர்கள் வீதம் அடைக்கப்பட்டனர். இப்போராட்டத்தில் சேலம் மாவட்டத்தினை பொருத்தமட்டில் 17 நபர்கள் வருவாய்த்துறையில் கைதாக 15 தினங்கள் சிறைவைக்கப்பட்டனர். இதற்கிடையில் தான் தமிழக அரசு ஒரே உத்தரவில் 1,76,000 அரசு ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது. 28 நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் சக்திவேல், ஜீவகாருண்யம் தலைமையில் சிறை சென்ற நாங்கள் 13.07.2003 அன்று விடுதலை செய்யப்பட்டோம்.

   காலவரையற்ற போராட்டம் தொடர்பான நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்ட காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணிக்கு செல்ல அனுமதி வழங்கியதன் பேரில் அனைவரும் பணிக்கு திரும்பினோம். அனால் கைதாகி சிறை சென்ற 17 நபர்கள் மட்டும் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட நாங்கள் 6 மாதகாலம் வேலை ஏதும் இன்றி தவித்து வந்த வேளையில் நமது சேலம் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைத்து வசூல் செய்து எங்களுக்கு மாதம் தோறும் ரூ.2500-ம், 25 கிலோ சாப்பாட்டு அரிசியும் வழங்கினர். மீண்டும் இந்த பணிக்கான வழக்கானது உச்ச நீதிமன்றம் சென்று நீதிமன்ற வழிகாட்டுதலின்படி எங்கள் அனைவரும் 02.01.2014 அன்று மீண்டும் பணிநியமனம் வழங்கப்பட்டது. இப்போராட்ட காலத்திலும், நிரந்தர பணிநீக்க காலத்திலும் ஜீவாவின் சங்க பணி என்பது மிகவும் சிறப்பானதாக இருந்தது. இதன் காரணத்தால்தான் ஜீவா என்ற ஜீவகாருண்யம் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில் மறையாத சகாப்தமானர். வாழ்க அவரது சங்கபணி.....!

 
மறவா நினைவுகளுடன்....

வெ.அர்த்தனாரி
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்.
சேலம் மாவட்ட மையம்.
சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்