எதிர்கால கடமைகள்

வருவாய்த்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தடையாக உள்ள அரசானை எண் 212 (ப (ம) நி.சீ.துறை) லிருந்து வருவாய்த்துறைக்கு விலக்களிக்க கேட்டல்.

ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு பரிந்துரை செய்த ஏ.எம்.சாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை கைவிட கேட்டல்.

வருவாய்த்துறையில் பணியிலிருக்கும் பொழுது காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்ய கேட்டல்.

வட்ட/கோட்ட/மாவட்ட அலுவலங்களில் உள்ள கணிணிகளுக்கு கணிணி இயக்குபவர் பணியிடம் வழங்கக் கேட்டல்.

வாக்காளர் பட்டியல் பராமரிப்புப் பணிக்கு துணைவட்டாட்சியர் நிலையில் நிரந்தர பணியிடங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட வேண்டுமெனக் கேட்டல்.

ஆண்டுதோறும் துணை ஆட்சியர் பட்டியல் வெளியிடக் கோருதல், வட்டாட்சியர் நிலையில் 7(பி) விதியை தளர்த்தக்கோருதல் ஆகிய துறைகோரிக்கைகளுக்காகவும்

பறிக்கப்பட்ட ஓய்வூதியப்பலங்களை திரும்ப பெற கோருதல்.

சரண்விடுப்பு, போனஸ் ஆகியவற்றை திரும்ப வழங்கிடக் கோருதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதைப் போல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க கோருதல் ஆகிய பொது கோரிக்கைகளுக்காகவும்.

நாம் ஒரே மனிதராக கரம் சேர்த்து செயலாற்ற வேண்டிய தருணம் இது. நமது கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டம் தான் வழி என்றால் அத்தகைய போராட்டத்தில் ஈடுபட நம்மை நாம் தயார்படுத்திக்கொள்வோம். கடந்த கால வேலை நிறுத்த போராட்டத்தில் நாம் பெற்றிருக்கிற படிப்பினையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் நமது ஊழியர்களை அணுகுமாறு அன்போடு பேசி அவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைத்து மக்களை\நோக்கி செல்ல வேண்டும். என்ற வேண்டுகோளை முன்வைத்து போராடும் அனைவரோடும் சேர்த்த போராடுவோம்; வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்து உங்கள் ஆக்க பூர்வமான விவாதங்களை எதிர்நோக்கி அறிக்கையினை நிறைவு செய்கிறேன்.

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்